நிதிஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு எதிராக வழக்கு
2013ஆம் ஆண்டுக்கான உத்தேச நிதிஒதுக்கீட்டு சட்டமூலம், அரசாங்க நிதி மீதான நாடாளுமன்ற அதிகாரங்களை தாரைவார்த்துக் கொடுப்பதற்கு இட்டுச்செல்லும் என்று உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
உத்தேச நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இம்மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தேச நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் இது சட்டமாக்கப்பட வேண்டுமானால், நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டு, மக்களின் கருத்துக் கணிப்புக்கு விடப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமெனக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அரசியலமைப்பின் 148ஆம் பிரிவின் பிரகாரம், பொது நிதியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கிறது. இந்நிலையில், உத்தேச நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் தாரைவார்க்கப்படுவதாகவும் அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply