டக்ளஸ் தேவானந்தா தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 18ம் திகதி

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 1985-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்த போது, திருநாவுகரசு என்பவரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை 4-வது கூடுதல் செசன்சு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் 1991-ம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா இலங்கை சென்று விட்டார். இதையடுத்து அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.

இந்த பிடிவிறாந்தை ரத்து செய்யக்கோரி, சென்னை 4-வது கூடுதல் செசன்சு நீதிமன்றில் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனுவில், `தன்னை இணைய வீடியோ மூலம் விசாரித்து, தனக்கு எதிரான பிடிவிறாந்தை ரத்து செய்யவேண்டும்` என்று கூறியிருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி சூளைமேடு பொலிஸ் இன்ஸ்பெக்டர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இறுதிக்கட்ட விசாரணைக்காக நீதிபதி எஸ்.ராஜகோபாலன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வக்கீல் எம்.பிரபாவதி, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் பிரகாஷ் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, `மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 18ம் திகதி அன்று பிறப்பிக்கப்படும்´ என்று உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply