பொன்சேகா தலைமையில் இன்று மாபெரும் கூட்டம்

முப்படைகளின் முன்னாள் பிரதானியும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சரத் பொன்சேகா தலைமையில் ஐக்கிய பிக்குகள் முன்னணி ஏற்பாடு செய்துள்ள கூட்டமொன்று இன்று கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பல தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ள போதும் சிலர் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் பேரணியில் கலந்துக் கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐதேக அறிவித்துள்ளது.

எனினும் சரத் பொன்சேகாவின் பேரணியில் கலந்துக் கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டால், கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிரான பேரணி நடத்தப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது பிக்குகள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்றே தவிர, புதிய கட்சி ஒன்றை உருவாக்கும் பேரணி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிக்குகள் முன்னணியுடன் சரத் பொன்சேகா இணைந்து ஏற்பாடு செய்துள்ள பேரணியில் தாம் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியில் கலந்துக் கொள்ள கூடாது என்ற கட்சியின் உத்தரவையும் மீறி, கரு ஜயசூரிய, பாலித்த தேவாரப்பெரும, பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட சில முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply