அகதிகள் சிறப்பு முகாமிலிருந்து 5 இலங்கையர்கள் விடுதலை
செங்கல்பட்டில் இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு 39 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போலி பாஸ்போர்ட் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்கள் தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வேண்டும், வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி பலகட்ட உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அகதிகள் அலெக்ஸ், சதாசிவம், மதன், ஏசுதாசன், தமிழ் ஆகிய 5 பேரையும் விடுதலை செய்ய மத்திய- மாநில அரசுகள் ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு நேற்று ஆர்.டி.ஓ. செல்லப்பா மற்றும் கியூபிராஞ் பொலிஸாரிடம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அகதிகள் 5 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டு திறந்தவெளி முகாமிற்கு மாற்றப்படுவார்கள்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சித்ரசேனன் உத்தரவுப்படி செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ள அனைவருக்கும் நேற்று முழு உடல் பரிசோதனை மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை நடந்தது.
செங்கல்பட்டு அரசு வைத்தியசாலை மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பரிசோதித்தனர். இதில் ஆர்.டி.ஓ. செல்லப்பா, வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply