வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து சீனாவுக்கு விளக்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் சீனத் தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சீனத் தூதரக அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.  இச்சந்திப்பில் இலங்கை இராணுவத்தினருக்கு சீனா வழங்கி வரும் உதவிகளை சுட்டிக்காட்டியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களில் இராணுவ கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக சீனத்தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதேச மக்களின் விருப்ப வெறுப்புக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமெனவும் இராணுவத்தினர் பாரியளவில் காணிகளை பயன்படுத்தி வருகின்றமை மக்கள் எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைககளில் ஒன்றாகும் எனவும் மாவை சுட்டிக்காட்டிள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply