இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் பேச்சு

இலங்கை விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை அமைச்சர் மகிந்தசமரசிங்கவுக்கும், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன் போது இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று பான் கீ மூனினால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மார்டின் நெசர்ஸ்கீயிடம் நேற்று கேள்வி எழுப்பட்டது.

அரசாங்கம் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்ற கூற்றின் கருத்து என்ன என்று இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கிய பேச்சாளர், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முறையாக அமுலாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள் என்று குறிப்பிட்டார்.

எனினும் இதில், பொறுப்புடன் நடந்துக் கொள்ளல் என்பதன் பொருள் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை தண்டிப்பது அல்லது பதவி விலக்குவது போன்ற விடயங்களை வலியுறத்துகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த விடயம் இலங்கையில் உள்ள சட்டத்திட்டங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்று பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply