தமிழர்களை கொன்றபோது செல்லாத இளையராஜா இன்று செல்கிறார்
2016 ல் புதிய அரசியல் வரலாறு படைப்போம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. பொது கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். ’’முல்லிவாய்க்காலில் கடைசி நேரத்தில் நடேசன் வெள்ளைக் கொடியுடன் போன போது அவரை சுட்டு கொன்றார்கள். இதை பார்த்து சிங்களப் பெண் நடேசன் மனைவி சிங்களத்தில் அவர்களிடம் நியாயம் கேட்டார்.
அந்த பெண்ணையும் 20 இராணுவத்தினர் கொன்றார்கள். இத்தனை காலமும் வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தாத இசையமைப்பாளர் இளையராஜா இப்போது தமிழனின் விடுதலை நெருப்பை நீர்த்துப் போக செய்ய நடத்தப்படும் இசை நிகழ்ச்சிக்கு நவம்பர் 3 கனடா செல்கிறார்.
தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் இப்போது போவது வருத்தம் அளிக்கிறது’’ என்று பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply