ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு பாதகமான விளைவு ?
எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை குறித்த விடயத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ள நிலையில், 13வது அரசியல் அமைப்பை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பது ராஜதந்திரம் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
13வது அரசியல் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று, இலங்கை அரசாங்கத்தின் பல பிரதிநிதிகள் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில் இந்திய நேற்று அதிர்ச்சி வெளியிட்டிருந்தது.
அத்துடன், இதற்கு தக்க தருணத்தில் தமது பதிலை வழங்கும் என்றும் இந்தியா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த விடயம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டின் போது இலங்கைக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தலாம் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply