பாலியல் தொழிலாளிகள் படையினரின் நெருக்குதல்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் பாலியல் தொழிலாளிகள் படையினரின் நெருக்குதல்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. காவல்துறையினரும்இ இராணுவத்தினரும் பாலியல் தொழிலாளிகளை இலக்கு வைத்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் பாலியல் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படும் நாடுகளின் வரிசையில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், சீனா, கம்போடியா, பிஜீ, மியன்மார், நேபாளம், பபுவா நியூ கினியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஆசிய முழுவதிலும் பாலியல் தொழிலை தடுப்பதற்கான சட்டங்கள் காணப்பட்ட போதிலும் அதில் நன்மைகளை விடவும், தீமைகளே அதிகளவில் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் சேரிப்பகுதிகளும் இரவு நேர கேளிக்கை விடுதிகளிலும் அதிகளவில் பாலியல் தொழிலாளிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply