தனியார் பிரிவுகளிற்கான வேதன அதிகரிப்பு தொடர்பில் கோரிக்கை
2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்துள்ள பிரதிபலன்கள் தொடர்பில் பல்வேறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், வரவு செலவு திட்டத்தில் அரச மற்றும் தனியார் பிரிவு சேவையாளர்களுக்கான அடிப்படை வேதனம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதவிர, மேலும் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, 13 ஆயிரத்து 442 ரூபா 50 சதத்தால் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, தனியார் பிரிவு சேவையாளர்களின் வேதனம் அதிகரிப்பிற்கு அரசாங்கம் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே டீ லால்காந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply