இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
இராமேஸ்வரத்தில் இருந்து 614 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 2400 பேரை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2400மீனவர்களில் சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்றனர். அப்போது இலங்கை கடற்படையினர் சிறிய படகுகளில் அங்கு வந்தனர்.
அவர்கள் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். கற்களை வீசியும் விரட்டியடித்தனர்.
படகுகளில் இருந்த மீன் வலைகளை அறுத்து கடலில் வீசினர். இதனால் இராமேஸ்வரம் மீனவர்கள் உயிருக்கு பயந்து மீன் பிடிக்காமல் கரை திரும்பினர்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அட்டூழியம் செய்து வருவதால் இராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply