மீளக்குடியேறிய மக்களுக்கு வீடுகள் கையளிப்பு

யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மட்டக்களப்பு வுவுணதீவு, கற்பக்கேணி கிராம மக்களுக்காக நிர்மானிக்கப்பட்ட 22 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.  சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் மனிதாபிமான உதவித்திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட்டன. வவுணதீவுப் பிரதேச செயலாளர் வெள்ளத்தம்பி தவராஜா தலைமையில், இடம்பெற்ற இந்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வில், சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் பிரதி உள்நாட்டுப் பணிப்பாளர் ஜே.எம்.சூரசேன உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த வீடுகள் ஒவ்வொன்றும் தலா 7 லட்சம் ரூபாய் பெறுமதியானவை என்று தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply