ஐநா உள்ளக இடம்பெயர்ந்தோர் குறித்த விசேட பிரதிநிதி இலங்கை விஜயம்
ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக இடம்பெயர்ந்தோர் குறித்த விசேட பிரதிநிதி சாலோகா பெயானி இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சாகோகா பெயானி கலந்துக் கொண்டிருந்தார்.
இதன் போது இலங்கையில் உள்ளக இடப்பெயர்வுக்கு உட்பட்டவர்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது, தாம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் அவசர அவசரமாக மீள்குடியேற்றப்பட்டமையானது, ஐக்கிய நாடுகள் சபையின் நியமங்களுக்கு எதிர்மறையானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை தொடர்பிலான பிராந்திய காலத்தவணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, உறுப்பு நாடுகளுக்கு இலங்கை தொடர்பில் உரையாற்ற 75 நொடிகளே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது, இந்த 75 நொடிகள் போதுமானதாக அமையாது என்று இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply