மழை காரணமாக 68,000 பேர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் 68,000இத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த 434 பேர் 37 இடைத்தங்கள் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக வெவ்வேறுபட்ட விபத்துகளிற்கு முகங் கொடுத்து மூன்று உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்தார்.
மழை, பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் வீடுகள் பல சேதமாகியுள்ளன.
இவேளை வீதிகளின் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்தமையின் காரணமாக போக்குவரத்து பாதிப்புக்களும் எற்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply