இலங்கையில் நீதித்துறைக்கு எதிரான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது
இலங்கையில் நீதித்துறைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் கண்டிக்கத்தக்கது என சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக நீதித்துறைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டத்துறை மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இலங்கையில் நீதித்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச ஜூரி ஆணைக்குழுவின் ஆசிய பணிப்பாளர் ஷேம் சராசி தெரிவித்துள்ளார்.
நீதித்துறைக்கு எதிராக செயற்படுபவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும். அவ்வாறு குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படாவிட்டால், எதிர்காலத்தில் இலங்கை பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்.
இந்தநிலையில், இலங்கையில் நீதித்துறைக்கு மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து தமது நிறுவனம் கவனம் செலுத்தும் என ஷேம் சராசி தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் நிர்வாகம் நீதித்துறைக்கு எதிராக செயற்பட்டு சர்வதேச சட்டங்களை மீறி வருவதாகவும் சராசி குற்றம் சுமத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply