ஈரான் மீதான அமெரிக்காவின் தடை! இலங்கை பாதிப்பு
ஈரானிடமிருந்து குறைந்தளவான மசகெண்ணெய்யை வாங்க அமெரிக்கா இலங்கையை அனுமதித்த போதிலும் ஈரானிய அரசாங்கத்துக்கு சொந்தமான தேசிய ஈரானிய எண்ணெய் கம்பனி மீதான தடை இவ்வாறான இறக்குமதியை செய்ய முடியாது தடுக்கின்றது. இதனால் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. சுமார் 1,35,000 மெட்ரிக் தொன் கொண்ட 10 இறக்குமதிகள் இலங்கைக்கு அனுமதிக்கப்பட்ட போதும் அதை பயன்படுத்த முடியாதுள்ளது என பெற்றோலிய துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஈரானிய மசகெண்ணெயை கொண்டு வருவதற்காக கடந்த மாதம் ஈரானுக்கு அனுப்பிய கப்பல் வெறுமனே திரும்பியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் கிடைத்தவும் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் வேலை ஆரம்பிக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சவூதி அரேபியாவிலிருந்து சலுகை அடிப்படையில் எண்ணெய் கொள்வனவு செய்யும் முயற்சிகளிலும் அரசாங்கம் ஈடுபட்டள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply