இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இந்தியா அழுத்தம் கொடுப்பதாக உணரவில்லை

இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவுபடுத்துமாறு இந்தியா அழுத்தம் எதுவும் கொடுப்பதாக நாம் உணரவில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என இந்தியா கூறுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்து குழுமத்தின் புரொன்ட்லைன் இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி
ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக மேலும்  அவர் தெரிவித்திருப்பவை வருமாறு

கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக இந்தியா அளித்த வாக்கு எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆட்டத்தையே மாற்றக் கூடிய நிலையில் இந்தியா இருந்தது. ஆனால், இப்போது இந்தியா எமக்குப் பின்னால் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானது என்று இந்தியாவைப் போலவே நாமும் புரிந்து கொண்டுள்ளோம். ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர், குறுகிய காலத்தில் ஆறு இந்திய அமைச்சர்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவுபடுத்துமாறு இந்தியா அழுத்தம் எதுவும் கொடுப்பதாக நாம் உணரவில்லை. ஆனால்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில், பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதே தமது விருப்பம் என இந்தியா கூறுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொதுமையத்தில் வைப்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply