நெஹ்ரு தீவில் 170 புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு

நெஹ்ரு தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதப் போரட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெஹ்ரு தீவுகளில் 170 புகலிடக் கோரிக்கையாளர்கள் பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அமைதியான முறையில் நெஹ்ரு தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருவதாக அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், எத்தனை பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள் என்பது பற்றிய சரியான புள்ளி விபரங்களை குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானியர் ஒருவர் கடந்த 22 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஹ்ரு தீவு முகாம் ஒர் மனநல காப்பகம் போன்று அமைந்திருப்பதாக புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

இந்த முகாம்கள் மனிதர்கள் வாழப் பொருத்தமற்றது என சில புகலிடக் கோரிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply