வரவு செலவுத் திட்டம் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் 8 ஆம் திகதி வரை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை இடம்பெறும்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதம் சனிக்கிழமைகளிலும் இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு அமைச்சு தொடர்பான நிதியொதுக்கீடு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இரண்டு தெரிவுக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதன் விவாதம் டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply