ஐநாவில் 80 சதவீதமான நாடுகள் இலங்கைக்கு ஆதரவு – சமரசிங்க

மனித உரிமைகள் தொடர்பாக ஜெனிவாவில் வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட 99 நாடுகளில் 80 சதவீதமான நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைப் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளோம்.

30 வருட காலம் நெருக்கடியை சந்தித்த இலங்கை ஒரே நாளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எனினும் நாம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சரும் ஐ.நா.வுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜெனிவாவில் மனித உரிமைகள் தொடர்பான 14 ஆவது மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் இந்தியா மற்றும் அமெரிக்கா இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள பல்வேறு விதந்துரைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு மிகவும் சாதகமான சூழலே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply