நவீன வசதிகளுடன் கூடிய யாழ் வைத்தியசாலை டிசம்பரில் திறப்பு

ஜப்பானிய அரசாங்கத்தின் 3000 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் தற்சமயம் நவீன மயப்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை டிசம்பர் மாத முற்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.  5 மாடிகளைக் கொண்ட இந்த போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு, ஸ்கான், அதிதீவிர சிகிச்சைக்கூடம், மற்றும் நோயாளிகள் தங்கியிருக்கும் வாட்டுக்கள், சத்திர சிகிச்சை நிலையங்களுடன், டாக்டர்கள் மற்றும் தாதிமாருக்கான வசிப்பிட வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

இந்த வைத்தியசாலையில் புற்றுநோய்க்கான சிகிச்சைப் பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு சகல வசதிகளையும் கொண்ட ஒரு வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும்.

இந்த வைத்தியசாலையில் பிராணவாயுவைத் தயாரிக்கும் ஒரு நிலையமும் ஏற்படுத்தப்படுவதுடன் இந்த வைத்தியசாலைக்கான மின்சார வசதியை சூரிய சக்தி மூலம் பெறவும் வசதிகள் செய்யப்படும். இந்த வைத்தியசாலையின் புனரமைப்புப் பணிகளை ஜப்பானிய அரசாங்கம் இலவசமாக செய்துகொடுக்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply