நவுரு தீவில் உண்ணாவிரதப் போராட்டம்

நவுரு தீவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  நவ்ரு தீவுகளில் உள்ள 300 புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அமைதியான முறையில் நவுரு தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருவதாக அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயுனும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் நாளிற்கு நாள் மாறுபடுவதன் காரணமாக, எத்தபைர் உணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது பற்றிய சரியான புள்ளி விபரங்களை குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நவுரு தீவு முகாம் ஒர் மனநல காப்பகம் போன்று அமைந்திருப்பதாக புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த முகாம்கள் மனிதர்கள் வாழப் பொருத்தமற்றது என சில புகலிடக் கோரிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply