குற்றப்பிரேரணை தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணை தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து பார்க்குமாறு மூன்று பீடங்களைச் சேர்ந்த மாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மல்வத்த மாநாயக்க, உடுகம புத்தரஜ்ஜித்த அஸ்கிரிய மாநாயக்க, தௌல்தன ஞானஸர அமரபுர மாநாயக்க மற்றும் நாபான பிரேமஸ்ரீ ராமஞ்ஞ மாநாயக்க தேரர்களே இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை, மாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்த ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கருஜயசூரிய தலைமையிலான குழுவினர் பிரதம நீதியரசருக்கு எதிராக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்றும் இதனை மீள்பரிசீலனை செய்வதற்கு வலியுறுத்துமாறும் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply