பணிப்பெண்கள் குறித்து கடுமையான சட்டங்கள்

இலங்கை பணிப்பெண்களை ஐக்கிய அரபு ராச்சியத்தில் பணிக்கு அமர்த்துபவர்களுக்காக புதியதும் கடுமையானதுமான சட்டதிட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.  ஐக்கிய அரபு ராச்சியத்திற்கான இலங்கை தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கமைய இலங்கை பணிப்பெண்களுக்கு மாதாந்தம் 800 திர்ஹாம்கள் வேதனமாக வழங்கப்படுவதுடன் அவர்களுக்கான உறைவிடம் விமான பயணச் சீட்டு மருத்துவ காப்புறுதி என்பன வழங்கப்படவேண்டும்.

இதுதவிர, பணிப்பெண்களுக்கு உறங்குவதற்கான தனி விடுதி வழங்கப்படுவதுடன், பாதுகாப்பு வைப்பாக ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வைப்பிடப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டதிட்டங்களுக்கு அமைய ஐக்கிய அரபு ராச்சியத்தில் வேலை கொள்வோர் கட்டுப்பட தவறும் பட்சத்தில் அங்கு பணியாற்ற அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தூதரகத்தின் முதலாவது செயலாளர் எம்.ஈ.ஜி.சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய அரபு ராச்சியத்தில் மூன்று லட்சம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply