இன்றைய பாராளுமன்ற அமர்வில் விசேட அறிவித்தல்கள்
பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (06) கூடுகிறது. சபாநாயகர் முக்கியத்துவம் வாய்ந்த பல அறிவித்தல்களை இன்று வெளியிட உள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்தன.
‘திவிநெகும’ திணைக்கள சட்ட மூலத்திற்கு எதிரான வழக்கு தீர்ப்பு கடந்த வாரம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று விசேட அறிவித்தல் விடுக்க உள்ளார்.
பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை சபாநாயகரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு இது குறித்து நேற்று (05) பாராளுமன்றத்தில் விசேட கட்சித் தலைவர் கூட்டமொன்று நடைபெற்றது.
இதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு நியமிப்பது குறித்தும் அதனுடன் தொடர்புள்ள விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதாக பாராளுமன்ற வட்டாரங்கள் கூறின. இந்த கூட்டம் நீண்ட நேரம் இடம்பெற்றதாக அறியவருகிறது.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பிலும் சபாநாயகர் இன்று விசேட அறிவித்தல் விடுக்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இதற்கு ஆளும் தரப்பு சார்பில் 4 பேரும் எதிர்க்கட்சி சார்பில் 3 பிரதிநிதிகளும் நியமிக்கப்படவுள்ளதோடு தமது கட்சி பிரதிநிதிகளை நியமிக்குமாறு சபாநாயகர் கட்சிகளுக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை கடந்த வியாழனன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply