இலங்கை இராணுவம் தமிழர்களுக்கு எதிராக போராடவில்லை – சவேந்திர சில்வா
இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு எதிராக எந்தகாலத்திலும் போரிடவில்லை எனவும் உலகில் மிகவும் பயங்கரமான பயங்கரவாத குழுவை தோற்கடிக்கும் நோக்கிலேயே போரிட்டதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.உகண்டாவில் நடைபெற்ற பாதுகாப்பு விடயம் தொடர்பாக வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அபிவிருத்தி நோக்கி பயணிக்கும் மாபெரும் கண்டம் என்ற வகையில்,ஆப்பிரிக்க நாடுகளுடன், தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வது காலத்திற்கு ஏற்றது. போர் வெற்றி குறித்து சரியான பார்வையுடன் செயற்படும் சர்வதேச மேடை ஒன்று அனைவருக்கும் அவசியம். விடுதலைப்புலிகளை தோற்கடித்த நாடு என்ற வகையில் இலங்கைக்கு சர்வதேச மேடை ஒன்று அவசியம் எனவும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply