அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 47 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த 47 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.  இரண்டு மீன்பிடி படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல தயாரான வேளையில் சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

´தமரா´, ´காலிங்க´ எனப்படும் இரு படகுகளில் 47 பேர் இருந்ததுடன் அதில் 3 பெண்களும் 5 சிறுவர்களும் அடங்குவதோடு அதில் 33 தமிழர்களும் 9 சிங்களவர்களும் 5 முஸ்லிம்களும் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டோர் யாழ்ப்பாணம், வவுனியா, நீர்கொழும்பு, முல்லைத்தீவு, புத்தளம், கிளிநொச்சி, வத்தளை, சிலாபம், மட்டக்களப்பு, கற்பிட்டி, மாவனெல்ல, மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானோர் மேலதிக விசாரணைகளுக்கென குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply