புகலிடக் கோரிக்கையாளர்கள் 30 பேர் இலங்கை வந்தடைந்தனர்
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 30 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று பகல் 12 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாகச் சென்ற 30 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
விசேட விமானம் ஒன்றின் மூலம் வந்த இவர்களுக்கு பாதுகாப்பிற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் வந்ததாகவும் தெரிவித்தார்.
இவர்கள் மாத்தறை, தங்காலை மற்றும் தெய்வேந்திரமுனை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply