கிறிஷ் குறூப்புடனான ஒப்பந்தத்தை சபையில் சமர்ப்பிக்குமாறு ரணில் கோரிக்கை
கொழும்பு கோட்டையிலுள்ள 4 ஏக்கர் நிலம் தொடர்பான கிறிஷ் குறூப்புடன் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, இலங்கை அரசாங்கத்தின் கணக்கில் செலுத்தப்பட்ட குத்தகைப் பணம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கிறிஷ் குறூப்புடனான ஒப்பந்தத்தில் முழுவிபரமும் சபையில் சமர்பிக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
‘அமைச்சரவை தீர்மானத்தின்படி முதலீட்டாளரான கிறிஷ் குறூப், இலங்கை கம்பனி ஒன்றை ஆரம்பித்து குத்தகைப்பணத்தின் 20 சதவீதமான, பில்லியன்ரூபாவை 7 நாட்களுக்குள் அரசாங்கத்துக்கு வழங்க ஒப்புக்கொண்டிருந்தது. மீதியான 80 சதவீத பணமான 4 பில்லியன் ரூபா எப்போது செலுத்தப்படும்.
திட்ட முன்மொழிவின்படி குத்தகை பணத்துக்கு மேலான கிறிஷ் குறூப் 450 அமெரிக்க டொலருக்கு மேலாக செலவளிக்க வேண்டும். கிறிஷ் குறூப் இந்த திட்டத்துக்காக எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டது. உரிய முறையில் விளம்பரப்படுத்தப்படாமல் இந்த நிலம் கிறிஷ் குறுப்புக்கு வழங்கப்பட்டுள்ளதா? வர்த்தக வலயமான கோட்டையில் வீடமைப்பு திட்டம் ஒன்று அனுமதிக்கப்பட்டது ஏன்?
கிறிஷ் குறுப்பின் உரிமையாளர்கள், அதன் தொழில் முயற்சி வகை, அனுபவம் என்ன? நகர அபிவிருத்தி அதிகாரசபை, முதலீட்டு சபை என்பவற்றுக்கும் இந்த கம்பனிக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் முழுவிபரமும் சபையில் சமர்பிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply