குற்றப்பிரேரணைக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானம்

பிரதம நீதியரசருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.உயர்நீதிமன்ற நீதிபதி நிமல் காமினி அமரதுங்க உள்ளிட்ட நீதிபதிகள் முழு முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்வதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு உரிமை உள்ளது என அச் சங்கத்தின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

நீதித்துறைக்கான சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக இந்த மனுவை தாக்கல் செய்ததாகவும், நீதித்துறைக்கான சுதந்திரம் பாதிக்கப்படும் போது சட்டத்தரணிகள் தமது கடமையை உரிய வகையில் நிறைவேற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply