ஐந்து வாரகால அவகாசம் அளிக்கும்படி பிரதம நீதியரசர் கோரிக்கை

தனக்கு எதிராக குற்றப்பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு விபரமாக பதிலளிக்க மேலும் ஐந்து வாரகால அவகாசம் அளிக்கும்படி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா கேட்டுள்ளார். நீலகண்டன் மற்றும் நீலகண்டன் அசோசியேட் எனும் சட்ட நிறுவனம் ஊடாக தான் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஒரு மட்டுப்படுத்திய பதிலை தெரிவுக்குழுவுக்கு தான் அனுப்பியுள்ளதாகவும் தனக்கு நவம்பர் 30 வரை தரப்பட்ட கால அவகாசம் போதாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மேலும் ஐந்து வார கால அவகாசம் தேவை எனவும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, எழுத்து மூலமாக நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

விரிவான பதிலை தயாரிப்பதற்கு தேவையான சில விபரங்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழு தன்னிடம் தரவில்லை என ஷிராணி பண்டாரநாயக்கா விசனம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply