ஷிராணி இன்று மீண்டும் தெரிவுக்குழு முன் ஆஜராவார்

பிரதம நீதியரசர் ஷுராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணையை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (04) மீண்டும் கூடவுள்ளது.
குற்றப் பிரேரணை தொடர்பாக ஆராயவென நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழு முன் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க இன்று மீண்டும் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் இன்று இதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

பாராளுமன்ற தெரிவுக் குழு முன் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி பிரதம நீதியரசர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தனது சட்டத்தரணிகளுடன் இன்று ஆஜராவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply