இலங்கை அகதிகள் 56 பேரை நாடு கடத்தும் திட்டம் இடைநிறுத்தம்
அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நாடு கடத்த தீர்மானிக்கப்பட்ட 56 இலங்கை அகதிகளின் நாடு கடத்தல் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நாடு கடத்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 56 இலங்கை அகதிகள் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றில் தமது சட்டத்தரணி ஊடாக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.இலங்கையில் தமக்கு உள்ள ஆபத்துக்களை கணக்கிலெடுக்காது அவுஸ்திரேலிய அரசு தங்களை நாடு கடத்த முயற்சிப்பதாக அகதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலிய அரசின் நாடு கடத்தல் திட்டத்திற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு அகதிகள் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றில் கோரியபோதும் அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 6ம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply