சுயாதீன குழு ஸ்தாபிக்க அரசு பின்னடிப்பு – ஐ.தே.க
பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணை விசாரணைக்காக சுயாதீன குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் ஏன் பின்வாங்குகிறார்கள் என்ற கேள்வியை, ஐக்கிய தேசிய கட்சி எழுப்பியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக இந்த கேள்வியினை எழுப்பியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களைக் கொண்ட குழுவொன்று, இந்த நடவடிக்கைகளுக்கு அவசியமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற தெரிவுக் குழு முன்வைத்த அறிக்கை பாழ் அடைந்த வீட்டில் பாத்திரத்தை உடைத்ததாக, தற்போது மக்கள் மத்தியில் கருத்து நிலவுவதாக அவர் தெரிவித்தார்.
இதனை கவனத்தில் கொண்டு நியாயமான விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியல் குற்றபிரேரணையை மீள பெற்றுக்கொள்ளுமாறு, அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப் போவதாக ஜே.வி.பி. இன் நாடாளுமன்ற குழுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply