பாகிஸ்த்தான் கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் பலி

வடமேற்கு பாக்கிஸ்த்தானில இடம் பெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர ஏராளமானவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்திற்கு அண்மையில், போராளிகளுக்கும் பாதுகாப்பு படைத்தரப்பினருக்கும் இடையே நேற்று சுமார் 15 மணி நேரம் பரஸ்பரம் மோதல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பிறிதொரு தரைக் கண்ணி வெடித் தாக்குதல் சம்பவத்தில் 10 இளம் பெண்கள் பலியாகியுள்ளனர்.

நங்கஹார் மாகாணத்தில், இந்த பெண்கள் விறகு சேகரித்துக் கொண்டிருந்த வேளை, இந்த கண்ணி வெடி, வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஒன்பது வயது முதல் பதினொரு வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply