உலகம் அழியாது! பொய் பிரச்சாரம் வேண்டாம்

2012 டிசம்பர் 21ம் திகதியுடன் உலகம் அழியும் என வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என கலாநிதி சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். உலகம் அழியும் என்று சொல்வதற்கு ஒப்புவிக்கக்கூடிய எந்தவித காரணங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் அழியப்போகிறது என பிரச்சாரம் செய்வதால் அதன்மூலம் பாரிய பிரச்சினைகள் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மழையுடன் கூடிய காலநிலையில் மீன்கள் நிலம்நோக்கி வருவது சாதாரண விடயம் என கலாநிதி சந்தன ஜயரத்ன கூறியுள்ளார்.

மாத்தறை – கம்புறுபிட்டிய பகுதியில் நேற்று மழையுடன் மீன்கள் விழுந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply