தமிழக மீனவர்கள் 14 பேர் கச்சத்தீவில் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மண்டபம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் மற்றும் ஜெகதாம்பட்டினத்தை சேர்ந்த 6 மீனவர்களையும் படகுகளுடன் இலைங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களை விடுவிக்க கோரி தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று மண்டபம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர் பிடியில் உள்ள மீனவர்கள் பெயர் விவரம் இதுவரை தெரிய வில்லை. தொடர்ந்து இது குறித்து ராமேஸ்வரம் மண்டபம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டமை மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply