சீரற்ற காலநிலையால் 4917 பாதிப்பு 9 பேர் பலி ஒருவர் மாயம் 7 பேர் படுகாயம்

நாட்டின் பல பாகங்களிலும் நிலவிவரும் மழை, மண்சரிவு, மரம்முறிவு, வெள்ளம் போன்ற சீரற்ற காலநிலையால் இதுவரை 1219 குடும்பங்களைச் சேர்ந்த 4917 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் 9 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளார். சீரற்ற காலநிலை, சுழல் காற்று காரணமாக 8 வீடுகள் முற்றாகவும் 495 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

அத்துடன் சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்த 830 குடும்பங்களைச் சேர்ந்த 3411 பேர் 18 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்டம்:-

சீரற்ற காலநிலையால் மாத்தளை மாவட்டத்தில் 363 குடும்பங்களைச் சேர்ந்த 1487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தளையில் அதிகூடிய 8 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு 5 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார். 38 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 161 குடும்பங்களைச் சேர்ந்த 742 பேர் 8 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டம்:-

கண்டி மாவட்டத்தில் இதுவரை 66 குடும்பங்களைச் சேர்ந்த 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மரணித்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர். 4 வீடுகள் முழுமையாகவும் 24 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேர் 2 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டம்:-

இம்மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 29 குடும்பங்களைச் சேர்ந்த 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டம்:-

இம்மாவட்டத்தில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 வீடுகள் முழுமையாகவும் ஒரு வீடு பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

பதுளை மாவட்டம்:-

இங்கு 113 குடும்பங்களைச் சேர்ந்த 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட 78 குடும்பங்களைச் சேர்ந்த 330 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம்:-

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 632 குடும்பங்களைச் சேர்ந்த 2466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுழல் காற்று காரணமாக 72 வீடுகள் முழுமையாகவும் 432 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. நிர்க்கதியான 556 குடும்பங்களைச் சேர்ந்த 2169 பேர் 7 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply