இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை

தென்மேற்கு வங்க கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 4 நாட்களாக மெதுவாக நகர்ந்து தற்போது இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பலத்த கடல் காற்று வீசி வருகிறது. கடலும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் மழை பெய்யவில்லை.

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் லேசான மழை தூறல் விழுகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை அருகே நிலை கொண்டுள்ளதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னை நகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply