அரசியல் செயற்பாடுகளில் பல்கலை மாணவர்களின் செயற்பாடுகளை முற்றாக தடை செய்ய வேண்டும்!

அரசியல்கட்சிகள் தமது தேவைகளுக்காக பல்கலைக்கழக மாணவர்களையோ அல்லது அவர்கள் சார்ந்த அமைப்புக்களையோ பயன்படுத்துவதை அரசாங்கம் முற்றாகத் தடை செய்ய வேண்டும் எனப் புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோன்று அரசியல் சார்ந்த கட்சிகளின் செயற்பாடுகளில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருபோதும் ஈடுபடக் கூடாதென மாணவர்களுக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பல்கலைக்கழகங்களில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி அம்மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட இதுவே காரணம் என்றும் இந்த இரு நடைமுறைகளையும் இறுக் கமாக அமுலாக்கும் பட்சத்தில் பல்கலைக்கழகங்களில் எழும் தொண்ணூறு சதவீதமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமெனவும் புத்திஜீவிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

எக்காரணம் கொண்டும் இவ்விரு சாராரையும் சேர விடாமல் தடுப்பதே மாணவரது கல்வி பாதிக்கப்படாமல் தொடர்வதற்கு ஏதுவாக இருக்கும். இல்லையேல் அரசியல்வாதிகள் தமது இலக்கை அடைய மாணவர்களே தமது கல்வியைத் தொடரமுடியாது போய்விடும் எனவும் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply