தலிபான்களால் கடத்தப்பட்ட 20 பாகிஸ்தான் இராணுவத்தினர் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பெஷாவர் பகுதியின் சோதனைச்சாவடிகளில் இருந்த 20-க்கும் மேற்பட்ட துணை நிலை இராணுவத்தினரை பாகிஸ்தான் தலிபான்கள் கடத்தி சென்றனர். ஆயுதம் ஏந்திய 200-க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள், அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த பழங்குடியின இராணுவத்தினரை சுற்றி வளைத்து கடத்தினர். அவர்களை மீட்பதற்கான முயற்சிகளைஇராணுவத்தினர் மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட இடத்திலிருந்து 4 -வது கிலோமீட்டரில் அவர்கள் 20 பேரின் உடல்களை கண்டுபிடித்துள்ளனர். அதிலிருந்து இருவர் மட்டுமே தப்பித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான், அமெரிக்காவுடனான உறவை முறிக்காத பட்சத்தில் நாங்கள் ஆயுதத்தை கீழே போடப்போவதில்லை என்று பாகிஸ்தான் தலிபான்கள் எச்சரித்து உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply