எகிப்திய குழப்ப நிலைக்கு தீர்வு: இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு முடிவு

நேற்று புதன்கிழமை எகிப்தின் அரசியல் குழப்ப நிலையில் இன்னொரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது எகிப்து ஜனாதிபதி மொஹமெட் மோர்சியை ஆதரித்த இஸ்லாமியக் கட்சி, எதிரணியினருடன் இணைந்து தற்போது நிலவும் குழப்ப நிலைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னர் அவர்கள் எதிர்க்கட்சியினரான சலாஃபி நௌர் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி மோர்சியையும் அவரது முஸ்லிம் சகோதரத் தொண்டர்களையும் விமர்சித்தும் ஷாரியா சட்டத்தின் படி நாட்டின் அரசியலமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டும் இருந்தனர்.

இதன் பின்னர் தேசிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த மதச்சார்பற்ற கட்சிகளின் குழு ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த வாரம் இந்த அரசியல் குழப்ப நிலை காரணமாக எகிப்தில் பல வன்முறைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் ஜனாதிபதி மோர்சி எகிப்தின் பல முக்கிய இடங்களில் அவசர காலச் சட்டமும் 30 நாட்கள் நீடித்த ஊரடங்குச் சட்டமும் அமுல் படுத்தியிருந்தார்.

எனினும் இந்த ஊரடங்குச் சட்டத்தையும் மதிக்காது பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது ஆட்சி செய்யும் அதிபர் மோர்சி எகிப்தில் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட முதலாவது அதிபர் ஆவார்.

மேலும் இவர் எகிப்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறைகளை அடுத்து அங்குள்ள சுமார் 11 அரசியற் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அனைவரும் சந்தித்து தீர்வு காணும் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுவித்திருந்தார்.

இதேவேளை எதிரணியினர் மோர்சியை சந்திப்பதற்கு முன்னர் தமது கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply