கனடாவில் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக மாற்ற புதிய சட்டமூலம்

தை மாதத்தினை தமிழ் மரபுத் திங்களாக நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்துவத்குரிய சட்டமூலம் ஒன்றை முதற் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் கனேடிய பாராளுமன்றில் முன்வைத்துள்ளார். இந்த சட்ட மூலம் நேற்று கனேடிய பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இன்று நாடாளாவிய ரீதியில் தமிழர்கள் சமூகம், கலாசாரம், பொருளாதாரம், அரசியல் எனப்பல்வேறு துறைகளிலும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களுடைய அடைவுகளையும், சமூக ஈடுபாட்டையும் கொண்டாடுவதற்குரிய நல்லதொரு வாய்ப்பாக இது அமையும் என சட்டமூலத்தை சமர்பித்து உரையாற்றிய ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளார்.

தை மாதம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானதொரு மாதமாகும், தமிழர் புத்தாண்டான தைப்பொங்கலுக்குரிய மாதம் இதுவாகும். எனவே இந்தச் சட்டம் மூலமானது, தை மாதத்தினை நாடளவிய ரீதியில் தமிழர் மரபுகளை அனுஷ்டிப்பதற்குரிய அங்கீகாரமாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சட்டமூலத்தை சம்ர்ப்பிப்பதையிட்டு பெருமையடைவதாகவும் இந்த அங்கீகாரமானது தமிழர் மரபுகளை கௌரவப்படுத்தவதோடு கனேடிய தமிழர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதமாக அமையுமென்றும் ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply