கர்நாடக மாநிலத்தில் குடியேறுமாறு கமலுக்கு அழைப்பு
விஸ்வரூபம் படத்துக்கு சில இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த படம் வெளியிட தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
விஸ்வரூபம் படத்துக்கு எனது சொத்துக்களை அடகு வைத்து ரூ.90 கோடி முதலீடு செய்து இருப்பதாகவும், அது வெளிவரா விட்டால் எனது வீடு உள்ளிட்ட சொத்துக்களை இழக்க நேரிடும் என்றும், அதனால் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி மதசார்பற்ற மாநிலத்தில் குடியேறுவேன் என்றும் கமல ஹாசன் உருக்கமாக பேட்டி அளித்தார்.
குடியேற எந்த மாநிலமும் கிடைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி மத சார்பற்ற நாட்டில் குடியேறுவேன் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் கமலஹாசன் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம், கர்நாடக மாநிலத்தில் குடியேற வாருங்கள் என்று அம்மாநில துணை முதல் – மந்திரி ஆர்.அசோக் அழைப்பு விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், ‘’விஸ்வரூபம் படத் துக்கு தடை விதித்து இருப்பது ஏற்புடையது அல்ல. மன வேதனையில்தான் அவர் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறியுள்ளார். அவர் எங்கும் செல்ல வேண்டாம். கர்நாடகாவில் குடியேற அவருக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தயாராக இருக்கிறோம்’’ என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply