ஈரான் தயாரித்த போர் விமானம்

உள்நாட்டிலேயே தயாரான நவீன போர் விமானத்தை ஈரான் காட்சிப்படுத்தியுள்ளது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஈரான் அதிபர் முகமது அஹ்மதிநிஜாத் பங்கேற்றார். கஹெர் 313 (Qaher 313) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், ஈரானின் ராணுவ சுயசார்பு நிலையைப் பறைசாற்றுவதாக அவர் தெரிவித்தார்.ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அந்த நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு சர்வதேச அளவில் தடை இருக்கிறது. இதனால், ரஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் 30 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய விமானங்களையே ஈரான் பயன்படுத்தி வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply