விஸ்வரூபம் திரைப்படம் ஓரிரு நாட்களில் தமிழகம் முழுவதும் வெளியாகும்

பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து விஸ்வரூபம் திரைப்படம் ஓரிரு நாட்களில் தமிழகம் முழுவதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது, கமல் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதுபோல், தற்போது குறிப்பிட்ட பகுதிகளை நீக்குவதற்கான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அவற்றை நீக்கிய பிறகு, விஸ்வரூபம் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் இறுதி வடிவம் மத்திய தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தணிக்கைக் குழு முன்னாள் உறுப்பினர் பாலு தெரிவித்தார்.

தணிக்கை நடைமுறைகள் ஒரே நாளில் முடிந்துவிடும் என்று கூறிய அவர், உடன்பாட்டு விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்து சட்டப்பூர்வ நடைமுறைகளையும் நாளைக்குள் முடித்து, விஸ்வரூபம் திரைப்படத்தை வரும் செவ்வாய்க்கிழமை வெளியிட வாய்ப்புள்ளது என்றார்.

அதேநேரத்தில், சட்ட மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசித்து, படம் வெளியாகும் தேதியை அறிவிக்கப் போவதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார். எப்படியிருந்தாலும், விஸ்வரூபம் திரைப்படத்தைக் காண தமிழக ரசிகர்கள் குறைந்தபட்சம் வரும் செவ்வாய்க்கிழமை வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply