இங்கிலாந்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 17 இந்தியர்கள் கைது
மேற்கு லண்டனில் உள்ள சவுத் ஆல் மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 1 பெண் உள்பட 17 இந்தியர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்களில் 10 பேர் விசா காலம் முடிந்த பின்னரும், 5 பேர் கள்ளத்தனமாக இங்கிலாந்திற்குள் நுழைந்தும் வாடகை வீடுகளில் தங்கியுள்ளது விசாரணையின் போது தெரிய வந்தது.இவர்கள் தங்குவதற்கு வீடுகளை வாடகைக்கு விட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வசிக்க வீடுகளின்றி மாடிப்படிகளின் அடிப்பகுதி, பஸ் நிலையம், பூங்கா, நடைபாதை ஆகிய இடங்களில் படுத்து தூங்கும் நூற்றில் 6 பேர் ஆசியா கண்டத்தை சேர்ந்தவர்கள் என்று குடியுரிமை துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply