பெரிய நீர் தேக்கத்தை கைப்பற்றிய சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்கள்
சிரியாவில், மிகப் பெரிய அணையை, கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, எதிர்கட்சியினர், 22 மாதங்களாக போராடி வருகின்றனர். ஆசாத் பதவி விலகாத காரணத்தால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா, ஆயுத உதவி அளித்து வருகிறது.இதனால், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது.சிரியாவில், எல்லை புற நகரங்களை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.பல மாதங்களாக நீடிக்கும் சண்டையில், 60 ஆயிரம் பேர் கொல்லப் பட்டுள்ளனர். ஐந்து லட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இதற்கிடையே, சிரியாவில், ரக்கா மாகாணத்தில், யூப்ரடீஸ் நதியின் மீது கட்டப்பட்டுள்ள, மிகப் பெரிய அணையை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசப்படுத்தியுள்ளனர்.
4.5 கி.மீ., நீளமும், 512 மீட்டர் அகலமும் கொண்ட இந்த அணையில், 880 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.இந்த அணையின் கட்டுப்பாட்டு அறையை, கிளர்ச்சியாளர்கள், நேற்று கைப்பற்றினர். அணையின் முக்கிய நுழைவாயில்களில், ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தங்கியுள்ளனர்.இந்த அணையை மீட்க, அரசு படைகள், குண்டு வீசக்கூடிய அபாயம் உள்ளதாக, சர்வதேச பார்வையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அணை மீது குண்டு வீசப்பட்டால், ஏராளமான கிராமங்கள், வெள்ளத்தில் மூழ்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply