பிரித்தானிய மகாராணி, பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் நிச்சயமாக பங்கேற்பார் : கமலேஸ் சர்மா
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணி, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் நிச்சயமாக பங்கேற்பார் என பொதுநலவாய நர்டுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.பொதுநலவாய நாடுகள் மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மஹாராணி நிச்சயமாக பங்கேற்பார் என சமலேஸ் சர்மா என்னிடம் தெரிவித்தார் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவியாக இரண்டாம் எலிசபத் மகாராணி கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply