10 மில்லியன் ரூபா கொள்ளை: நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்

கொழும்பு கொம்பனித் தெரு வீதியில் 10 மில்லியன் ரூபாவை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிலிருந்து மூன்று குழுக்களும் ஒரு பொலிஸ் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.பொலிஸ் சீருடையில் பச்சை மற்றும் நீள நிறத்திலான ஜீப் வாகனங்களில் வந்த இனந்தெரியாத சிலர் நேற்று மாலை தாம் குற்றவிசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் என தெரிவித்து சோதனையிடும் போர்வையில் வர்த்தகரிடம் இருந்து 10 மில்லியன் ரூபா பணத்தை கொள்கையிட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply